தொடரும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Thirumal Thirumal in காலநிலை
43Shares

ஹட்டன், போடைஸ் பிரதான வீதியின் என்.சி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் நேற்று மாலை பாரிய கற்கள் விழுந்ததால் வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த பகுதியிலேயே மண்சரிவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மண்சரிவு காரணமாக போடைஸ் மன்ராசி, அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பகுதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பிரதேசங்களுக்கு செல்பவர்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேளை, தற்போது இந்த வீதியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் போகக்கூடியதாக உள்ளது.

எனினும், அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு மாற்று வீதிகளை பயன்படுத்துவதே சிறந்தது எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.