முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு! ஒருவர் பரிதாபமாக மரணம்

Report Print Shalini in காலநிலை
81Shares

முல்லைத்தீவு - மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில், முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற 60 வயதுடைய தாவீது செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தெப்பம் ஒன்றை பயன்படுத்தியே மீன்படி தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்துள்ளது.

இதன்போது கடலில் தவறி விழுந்த தாவீது செல்வரத்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று காலை கொழும்பில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.