காலநிலையில் மாற்றம்! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Nivetha in காலநிலை

நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.