கொழும்பில் பல பகுதிகளிலும் தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது!

Report Print Murali Murali in காலநிலை

கொழும்பின் பல பகுதிகளிலும், தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

கடந்த சில நாட்களாக நீடித்திருந்த வெப்பமான காலநிலையை தொடர்ந்து தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.

இதனிடையே, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.