மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!

Report Print Murali Murali in காலநிலை

நாட்டின் தென்மேல் பிரதேசத்திலுள்ள வானம் மேக மூட்டம் நிறைந்ததாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின், மேல், மத்திய, சப்ரகமுவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

வட மத்திய மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதோடு, சப்ரகமுவா, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சுமார் 75 மில்லி மீற்றர் (75cm) வரையான கடும் மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாடு, தென் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடை காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையான பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.