வவுனியாவில் ஒன்றுகூடி தொழுகை நடத்திய மக்கள்

Report Print Theesan in காலநிலை

வவுனியாவில் தற்போது நிலவி வருகின்ற கடும் வறட்சி நிலை காரணமாக குளங்கள், கிணறுகளில் நீர் வற்றி குடிநீருக்கு கூட தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக கால் நடைகளும் உணவின்றி நோய் வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.

இதன் காரணமாக வவுனியா சூடு வெந்தபுலவு கிராம சிறுவர்கள், வயோதிபர்கள், அறபுக்கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மழை வேண்டி நேற்று தொழுகை நடத்தி இறைவனை பிரார்த்தனை செய்துள்ளனர்.