யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் பலத்த காற்று! நாளை முதல் மழை குறையும்

Report Print Murali Murali in காலநிலை

நாடு முழுவதும் பலத்த காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நாட்டின் மத்திய, வட மேல், வட மத்திய, தென், சபரகமுவா, மேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை மாவட்ங்களிலும் பாரிய காற்று வீசலாம் எனவும் இது மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை உயர்வாக காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மொணராகலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை, காற்று நிலை நாளை முதல் குறையும்

நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று மற்றும் மழைக்கான நிலை, நாளை (20) முதல் குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யலாம் எனவும், குருணாகல் மாவட்டத்தில் இடைக்கிடை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.