முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் பாரியளவான மீன்கள்

Report Print Yathu in காலநிலை

முல்லைத்தீவு - வட்டுவாகல் ஆற்றில் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கில் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக நீர் வெப்பமடைந்து இந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆற்றுப்பகுதியில் நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் செல்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.

Latest Offers