உஷ்ணமான காலநிலை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை

நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதேவேளை, நாளை பிற்பகல் ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.