வவுனியா ஓமந்தையில் காற்றுடன் கூடிய மழை! வீடு ஒன்று சேதம்

Report Print Thileepan Thileepan in காலநிலை

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று மாலை ஓமந்தை, மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நாம்பன் குளம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென வீசிய காற்றின் காரணமாக வீடு ஒன்றின் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டு, அதன் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளது.

இதனால் மழை நீர் வீட்டிற்குள் சென்றதில் அந்தக் குடும்பம் பாதிப்படைந்துள்ளது.

அத்துடன், வீட்டில் நின்ற மா மரமும் முறிந்து விழுந்துள்ளதுடன், அவ் வீட்டிற்கு அருகில் உள்ள வேறு சில மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. எனினும் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை.

Latest Offers