இலங்கையை அச்சுறுத்தும் பாரிய வெள்ளம்! பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலல்லாவிட்ட பிரதேச செயலகத்தில் 3 பெண்களும், அகலவத்தை பிரதேசத்தில் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக அந்தப் பகுதியை சேர்ந்த பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

பஹலஹெவெஸ்ஸ, கொஸ்கெட்டிய, மல்வச்சிகொட பகுதியில் பாரிய அளவிலான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பகுதியின் பல பிரதான மற்றும் உள்ளக வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பகுதியில் நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers