கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கிப் போக காரணம் என்ன? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நிபுணர்

Report Print Vethu Vethu in காலநிலை

கொழும்பில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து துறைசார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

சிறியளவில் மழை பெய்தாலும், கொழும்பு நகரம் பல அடி நீரில் மூழ்கிப் போகிறது. இதற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை, வீடுகள், ஹோட்டல்கள் என்பனவற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காரணமாக நீர் பாய்ந்து செல்ல முடியாமையினால், வெள்ள நிலைமை ஏற்படுவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த இருந்த ஒரேயொரு வழியான சதுப்பு பிரதேசம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பல லட்சம் டன் மணலை முத்துராஜவெல நிலத்தில் நிரப்பினார்.

தேசிய சொத்து மற்றும் சுற்றாடலுக்கு பாரிய அளவு அழிவை ஏற்படுத்திய இந்த திட்டத்தினால் முத்துராஜவெல நிலப்பரப்பின் பகுதி ஒன்று அழிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று முதல் இன்று வரை ஆட்சியாளர்கள் இந்த நிலத்தை பாதுகாக்காமையினால் கொழும்பு வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆர்வலர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers