தொடரும் சீரற்ற காலநிலை! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

Report Print Jeslin Jeslin in காலநிலை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்குள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த அசாதாரண நிலைமையினால் 12, 478 குடும்பங்களைச் சேர்ந்த 48, 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களில் 1,348 குடும்பங்களைச் சேர்ந்த 5,834 பேர் 21 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 9 பேரில் ஆறு பேர் வெள்ளத்தில் மூழ்கியதனால் மரணமடைந்துள்ளதாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.