நாட்டில் சீரற்ற காலநிலை! 12 பேர் பலி

Report Print Murali Murali in காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக இதுவரையிலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 17 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 69 ஆயிரம் பேர் வரையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.

தெற்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட 12 மாவட்டங்களில் பலத்த மழையும் மற்றும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.