கிளிநொச்சியில் கடும் காற்று: வீட்டின் மீது விழுந்த மரம்

Report Print Yathu in காலநிலை

கிளிநொச்சி, ஜெயந்தி நகர் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என தெரியவருகிறது.