மட்டக்களப்பில் வெள்ளப் பெருக்கு! பல பகுதி நீரில் மூழ்கியது : பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

Report Print Nesan Nesan in காலநிலை

தொடர் மழைவீழ்ச்சி காரணமாக மட்டு புனானை வீதியில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களிலிருந்து மட்டு புனானையூடாக செல்லும் பிரதான பாதையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ள நீர் வழிந்தோடும் வரை இப்பிரதேசத்தினூடாக அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒருவாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டு ,அம்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers