அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்கு இருக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டின் தென் மேற்கு பகுதியில் பெய்து வரும் மழை குறைவடைந்து வருகின்றது. எனினும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டிலும் கடல் பகுதிகளிலும், அடை மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் வானம் முகில்களினால் மூடப்பட்டு காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கடல்சார் தொழிலில் ஈடுபடுவோருக்கு திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகளின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காங்கேசன்துறையில் இருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான ஆழ் கடல் பகுதிகளில் கொந்தளிப்பு நிலை காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாழமுக்க நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரை தாக்கம் செலுத்தும் என்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers