வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

Report Print Thileepan Thileepan in காலநிலை

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது என பிரதேச நீர்பாசன பொறியியலாளர் ரி.சுகந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், குளத்து நீர்மட்டமும் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் 15.6 அடியாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் ஈரப்பெரியகுளம் 14.11 அடியாகவும், இராசேந்திரங்குளம் 9.6 அடியாகவும் உயர்வடைந்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் சில நாட்களில் இவை வான் பாயக் கூடிய நிலை உள்ளது.

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு மருதமடு குளம் 11.2 அடியாகவும், செட்டிகுளம் முகத்தான்குளம் 11.2 அடியாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அவை தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

கடந்த வருடம் வறட்சி காரணமாக குளங்கள் நீர்மட்டம் குறைவாகவே காணப்பட்டன. ஆனால் தற்போது சில நாட்களாக பெய்த வரும் மழையினால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இருப்பினும் மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers