மட்டக்களப்பின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவருவது மட்டுமன்றி வெள்ள நீர் வழிந்தோடும் நிலையும் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக படுவான்கரைக்கான போக்குவரத்துகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதை காணமுடிவதுடன் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியிலேயே மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வலையிறவு பாலம், மண்டூர்-வெல்லாவெளி வீதி, தாந்தாமலை பிரதான வீதி, மட்டக்களப்பு விமான நிலைய வீதி என்பன ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு முகத்துவாரத்தில் ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வாவிப்பகுதி ஊடாக வெள்ள நீர் கடலுக்குள் செல்லுவதனால் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதை காணமுடிகின்றது.

எனினும் மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையினையும் காணக்கூடியதுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Latest Offers