இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்! 24 மணித்தியாலத்தில் தீவிரம் அடையும் என எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை

அந்தமான் கடல் பரப்பின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொது மக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய இன்றும் நாளை காலை வேளையில் இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை பெய்யக் கூடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மேல், சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 27000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Latest Offers