முல்லைத்தீவில் தொடரும் பனிமூட்டமான காலநிலை

Report Print Mohan Mohan in காலநிலை

முல்லைத்தீவில் இன்று பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று அதிகாலை தொடக்கம் தற்பொழுது வரை பனிமூட்டமான காலநிலை தொடர்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த மாவட்டத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பெய்த அடை மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.

மேலும் இந்த மாதம் குறுகிய சில நாட்களுக்குள் காற்று, மழை, வெயில், பனி என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.