குளிரில் உறைந்து போகும் இலங்கை! திடீரென ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கும் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் கடல் பிரதேசத்தில் காணப்படும் குறைந்த தாழமுக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சீரான காலநிலை நிலவும் அதேவேளை, கடுமையான குளிரான காலநிலையே நிலவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடாக இடைக்கிடையே 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.