இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in காலநிலை

நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாணக் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers