கடும் குளிரில் உறைந்து போகும் தமிழர் தாயகம்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் குளிரான காலநிலை நிலவுவதாக திணைக்களம் இன்று விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவும். எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறியளவில் மழை பெய்ய கூடும் என கூறப்படுகின்றது.

மேல் மற்றும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, புத்தளம் கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

மத்திய மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் காலை நேரத்தில் பனிமூட்டத்துடனான காலநிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.