கடும் குளிரால் உறைந்து போகும் இலங்கையின் பல பகுதிகள்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் பல பாகங்களில் குளிரான காலநிலை தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரவு மற்றும் காலை நேரங்களில் தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் மதிய வேளையில் மிகவும் உஷ்ணமான காலநிலை நிலவும். இவ்வாறான மாறுபட்ட காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வழமையை விடவும் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. இன்றையதினம் 6 செல்சியஸ் பாகையாக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

நுவரெலியாவில் இன்று முதல் பனித் துகள்கள் கொட்டத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் மழையற்ற காலநிலை நிலவும் என திணைக்களம் இன்று விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers