இலங்கையின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடைமழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரும் அதிக மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் கடும் காற்று வீசும். இடி, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.