மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மில்லிமீற்றரையும் தாண்டிய அடைமழை

Report Print Rusath in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

மழை குறித்து அவர் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 105.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பன்கேணி பகுதியில் 122.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 52.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சை பகுதியில் 41.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 20.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மற்றும் கல்முனை பகுதியில் 97.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் அதானிக்க முடிகின்றது. செவ்வாய்க்கிழமை தைப் பொங்ளைக் கொண்டாடவுள்ள நிலையில் கடும் மழை பெய்து வருவதனால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க முறையான வடிகாலமைப்பு வசதியின்மை காரணமாக தொற்றுக்களும், நுளம்புகளும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.