இலங்கைக்கு உதவும் தாய்லாந்து! வானிலையாளர்கள் கடும் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை

நீர்மின்சாரத்துக்காக நீரேந்துப்பகுதிகளில் செயற்கை மழையை பெய்யவைப்பது குறித்த பரிந்துரைகளை சிரேஸ்ட வானிலையாளர்கள் குழு ஆராய்ந்துள்ளது.

இந்நிலையில், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராயவேண்டும் என்றும் பயிற்சிநிலை ஆராச்சியை மேற்கொள்ளவேண்டும் எனவும் சிரேஸ்ட வானிலையாளர் குழு கோரியுள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், வெப்பக்காலநிலையின் போது மழையை பெய்ய வைப்பதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முனைப்பில் இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கல்சியம் குளோரைட், கல்சியம் ஒக்சிட், சோடியம் குளோரைட் மற்றும் யூரியா என்பவற்றை பயன்படுத்தி செயற்கை மழையை பெய்யவைக்க முடியும் என்று தாய்லாந்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

முகில்களை ஒன்றுசேர்த்து பின்னர் அதனை கருமையாக்கி சுமார் 24 விமானங்களை கொண்டு சோடியம் குளோரைட்டை முகில்கள் மீது பரவச்செய்வதன் மூலம் இந்த திட்டத்தை தாய்லாந்து மேற்கொண்டு வருகிறது.

எனினும் இலங்கையில் இந்த திட்டத்தை மேற்கொள்ள அத்தனை விமானங்களை பெற்றுக்கொள்ளமுடியுமா? என்றக்கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறு செய்தால் அது பாரிய செலவில் சென்று முடிந்துவிடும். எனவே இதனைப்பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும் என்பதே வானிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.