முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் பல பகுதிகளிலும் வான்பரப்பை மழைமேகம் சூழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் கரையோரப்பகுதி மீனவர்களின் பல வாடிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமுழமுனை, முறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் காலபோக நெற்பயிர் செய்கை செய்த விவாசாயிகள் அறுவடை செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.