நுவரெலியா - நானுஓயா பகுதியில் பலத்த காற்று

Report Print Sinan in காலநிலை

நுவரெலியா - நானுஓயா பகுதியில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலத்த காற்று காரணமாக சில வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

இவ்வாறான நிலையில் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers