எதிர்வரும் மே மாதம் வரை நாட்டில் வெப்பத்துடனான காலநிலை

Report Print Gokulan Gokulan in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் வரை வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

குறித்த வெப்பத்துடன் கூடிய வானிலை வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளிலும் நீடிகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கில் 15 - 25 வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.