வெளிநாட்டு உதவியுடன் ஆரம்பமாகும் செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை

Report Print Nivetha in காலநிலை

செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று செயற்கை மழை பொழிய வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers