நாட்டின் பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் , சப்ரகமுவ , வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களில் அடைமழையுடன் கூடிய காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அடைமழை பெய்யும் போது கடும் இடி , மின்னல் தாக்கங்களும் ஏற்படுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த காலநிலை நாளை வரை தொடரும் என திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.