நாட்டின் பல பிரதேசங்களில் பொது மக்கள் எதிர் நோக்க உள்ள பிரச்சினை!

Report Print Gokulan Gokulan in காலநிலை

நாட்டின் பல பிரதேசங்களில் நாளை அதிக அளவான வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று இரவு வேளையில் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன், மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை குறுகிய நேரத்திற்கு காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வடமேல் மாகாணத்துடன் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வெப்பமான வானிலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Latest Offers