எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை

எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற மாவட்டங்களில் இந்த வெப்ப நிலையை எதிர்ப்பார்க்க முடியும்.

நாளைய தினம் பொது மக்களினால் உணரக் கூடிய வகையில் ஆக கூடுதலான காலநிலை இடம்பெறக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.