தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை
478Shares

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 32 - 41 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும்.

குறித்த பிரதேசங்களில் வெப்பம் 32 - 41 பாகை செல்சியஸாக காணப்பட கூடும் என்பதனால் இது தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானத்தை செலுத்த வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலைக்கு முகம் கொடுப்பதற்கு போதுமான அளவு நீர் பருக வேண்டும். அத்துடன் வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டும். வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெயில் படும் இடங்களில் அதிகம் சிரமப்பட்டு வேலை செய்வதனை குறைக்க வேண்டும். வெள்ளை போன்ற நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும். சிறுவர்களை வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பம் பாரியளவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 37.1 பாகை செல்சியஸ் வெப்பம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

குறைந்த வெப்பநிலையாக 7.6 பாகை செல்சியஸ் நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.