இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!

Report Print Nivetha in காலநிலை

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது அவசியம். பிள்ளைகளை தனியே விடக்கூடாது.

பொதுவாக வெளிர்நிற ஆடைகளை அணிவது உசிதமானது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் அனைத்து மக்களும் கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் அவதானமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஆபத்தினை தவிர்த்து கொள்ள முடியும்.