மலையகத்தில் அடைமழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! மட்டற்ற மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிலவி வருவதால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையின் சில பகுதிகளில் நேற்று அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்துள்ளது. நேற்று மதியம் 1.30 மணியளவில் 3.00 மணி வரை பொகவன்தலாவை, நோர்வுட், மஸ்கெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்துள்ளது.

அடைமழை காரணமாக மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது.

காசல்ரீ மற்றும் மவுசாலை பகுதிகளில் கடும் வரட்சியை தொடர்ந்து மழைய பெய்ய ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் நீர் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடைமழை பெய்ய ஆரம்பித்துள்ளமை குறித்து பல தரப்பினரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.