இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடும் வெப்பம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை

இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம்.

இதன் காரணமாக, வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம். முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது அவசியம்.

பிள்ளைகளை தனியே விடக்கூடாது. இலேசான, வெளிர்நிற ஆடைகளை அணிவது உசிதமானது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers