மட்டக்களப்பில் வழமையை விட இன்று ஏற்படவுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மாலை அடை மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, வடமேல், மேல் மாகாணம், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யகூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியும் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளமாறும் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கல்முனை, கொக்காவில், மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers