கொழும்பின் பல்வேறு பகுதிகளில் அடைமழை!

Report Print Vethu Vethu in காலநிலை

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை கொழும்பு கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

23.5 மில்லி மீற்றராக மழை பதிவாகியுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பில் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணத்திலும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.