நாட்டின் பல பகுதியில் நாளை அதி உயர் வெப்பநிலை! மக்கள் அவதானம்

Report Print Sindhu Madavy in காலநிலை

நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினம் அதிகளவான வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

இதன்காரணமாக, நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.