திருகோணமலை மாவட்டத்தில் கடும் வெப்பம் மக்கள் அவதி

Report Print Mubarak in காலநிலை

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரட்சியினால் கூலித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், பயணிகள் மற்றும் முதியோர் எனப் பலரும் அவதியுறுகின்றனர்.

இம்மாவட்டத்தில் கந்தளாய், கிண்ணியா, மூதூர், புல்மோட்டை, வெருகல், கோமரங்கடவெல, பதவிசிறிபுர, மொறவெவ மற்றும் தம்பலாகாமம் போன்ற பகுதிகளில் பகல் வேளைகளில் கடும் வெப்பமான கால நிலை ஏற்படுகின்றது.

பல மாத காலமாக பருவ மழை பெய்யாத நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவுகின்றது.

இந்நிலையில் மக்களின் இயல்பு நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் தகர வீடு, மற்றும் சீட் வீடுகளில் வசிக்கும் மக்களும் இவ் வெப்பம் காரணமாக மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அதிகரித்த வரட்சியின் காரணமாக பெருமளவிலான கால் நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலங்களில் புற்தரைகள் கருகிய நிலையில் காணப்படுவதால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் உணவுக்காக பெரும் அலைச்சலுடன் மேய்ச்சல் நிலங்களை தேடி தமது கால்நடைகளை கொண்டு செல்வதையும் காணமுடிகின்றது.