கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண நிலைமையை விடவும் அதிகரித்து காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சாதாரண அளவை விடவும் 04 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், பதுளை, கட்டுகஸ்தோட்டை, நுவரெலியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண அளவை விடவும் 03 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், குருணாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இரவு நேரத்திலேயே இவ்வாறு வெப்பநிலை சாதாரண அளவை விடவும் அதிகரித்து காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.