காலநிலை அவசரநிலைமை பிரகடனம் செய்யப்பட வேண்டும்: சம்பிக்க

Report Print Kamel Kamel in காலநிலை

காலநிலை அவசரநிலைமை பிரகடனம் செய்யப்பட வேண்டுமென மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த ஆண்டில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யாத காரணத்தினால் காலநிலை அவசரநிலைமை பிரகடனம் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

குடிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் நீர் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை காரணிகளை கருத்திக் கொண்டு முன்கூட்டியே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Latest Offers