வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் பல பகுதிகள்! அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை

நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகளில் நீர் பாய்ந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மற்றும் பலங்கொடை ஆசிய பிரதேச செயலகத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பல பகுதிகளில் நிலவிரிசல், நிலம் தாழிறங்கல், மின்சார தூண்கள் சரிந்து வீழ்தல், மரங்கள் முறிதல் போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தி பிரதேசத்தின் கீழ் மட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நுவரெலியாவின் பிரதான வீதியின் பல இடங்கள் தாழிறங்கியுள்ளமையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் ஹட்டன், ஹட்டன் நீர்தேக்கம் ஒன்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டமையினால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் ஹட்டன் - கொழும்பு வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை களு மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதன் இரண்டு பக்கம் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமை அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடல்களில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்பவும், கடலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் கடற்படை விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை , காலி பகுதிகளில் மின்சார விநியோகம் முற்றாக செயலிழந்துள்ளது. இதனை சரி செய்யும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இருந்து பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video