கொழும்பின் தற்போதைய நிலை! அவசரமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை
4400Shares

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று காலை முதல் மிகவும் பலத்த காற்று வீசி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இதனால் வீதியோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் உடைந்து வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றது. இந்நிலையில், சாரிதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்றும் இல்லாதவாறு இன்று காலை முதல் கொழும்பில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது.

குறிப்பாக அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் வீதிகளில் தடுமாறுவதை காணமுடிகின்றது.

மரக்கிளைகள் மற்றும் விளம்பர பதாதைகள் பலத்த காற்றின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றது. மேலும், காற்றின் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்த முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதனையும் காணமுடிந்தது.

இந்நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


you may like this video