கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு இன்று காலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசமான நிலைமை 6 மணித்தியாலங்கள் தொடரும் என விசேட அறிக்கையின் மூலம் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று மாலை 3.30 மணி வரை செல்லுப்படியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கும் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.