கொழும்பின் பல்வேறு பகுதிகளில் மினி சூறாவளி!

Report Print Vethu Vethu in காலநிலை

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மினிசூறாவளி வீசியமையினால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கொழும்பின் பல பகுதிகளிலுள்ள பாரிய பதாதைகள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களும் மற்றும் திருகோணமலை மற்றும் மாத்தலை மாவட்டங்களிலும் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள விசேட காலநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் பல மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers