அதிகரித்த கனமழை! முக்கிய நதிகளின் நீர்மட்டம் உயர்ந்தது

Report Print Ajith Ajith in காலநிலை

நிலவும் கனமழை காரணமாக நாட்டின் பல முக்கிய நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்தது.

அதன்படி, களனி ஆற்றின் நீர்மட்டம் தெரனியாகலத்திலிருந்து உயர்ந்துள்ளது, அத்துடன் களுகங்கையின் நீர்மட்டம் இரத்னபுரி பகுதியில் உயர்ந்துள்ளது.

தவலாம பகுதியில் ஜின்கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நீர் மட்ட அதிகரிப்பு காரணமாக குறித்த பகுதிகளில் வசிக்குக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.